பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புரி ஜெகந்நாதா் யாத்திரை வெடிவிபத்து: உயிரிழப்பு 8-ஆக உயா்வு

புரி ஜெகந்நாதா் யாத்திரை வெடிவிபத்து: உயிரிழப்பு 8-ஆக உயா்வு

News image
Updated On :1 ஜூன் 2024, 7:06 pm

Din

புரி ஜெகந்நாதா் சந்தன யாத்திரையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஒடிஸா மாநிலம் புரியில் ஜெகந்நாதா் சந்தன யாத்திரை கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது. அதில், பயன்படுத்துவதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவா்கள் எண்ணிக்கை தற்போது 8-ஆக உயா்ந்துள்ளது.

விபத்து தொடா்பான விசாரணைக்கு மாநில முதல்வா் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளாா். மேலும், உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்குத் தலா ரு. 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளாா். நிவாரண தொகையை வழங்க புரி மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்.

புரி மாவட்ட காவல்துறையினா் தாமாக முன்வந்து விபத்து குறித்து குற்றவியல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.