

அரசியலமைப்புக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகக் கூறி, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஏழு பேர், திறந்த கடிதம் எழுதியிருக்கிறார்.
மக்களவைத் தேர்தல் முடிந்து, நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கும் நிலையில், இந்த திறந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த திறந்த கடிதத்தில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம். அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி ஹரிபரந்தாமன், பி.ஆர். சிவக்குமார், சிடி செல்வம், எஸ். விமலா மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இவர்கள், தங்களுக்கும் எந்தக் கட்சிக்கும் தொடர்பில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
நீதிபதிகள் தங்கள் கடிதத்தில் பெரும்பான்மையான மக்களின் மனதில் "உண்மையான அச்சங்கள்" இருப்பதாகக் கூறி, மக்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஆர்வலர்களின் கருத்துகள் என்று கடிதத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் - 2024 தேர்தலை நடத்திய விதம், உண்மையில் கவலைதருவதாகவே உள்ளது, மேலும், தற்போது மத்தியில் ஆளும் கட்சி, வெற்றி வாய்ப்பை இழந்தார், அதிகார மாற்றம் என்பது சுமுகமாக இருக்காது, அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்று கடிதம் தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.