இரவு 8 மணி: பாஜக 130, காங்கிரஸ் 55 தொகுதிகளில் வெற்றி
தேர்தல் முடிவுகள் வெளியிடுவதில் மந்தமாக இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.


மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் எண்ணப்பட்டு வருகின்றது.
சூரத் மக்களவைத் தேர்தலில் ஏற்கெனவே போட்டியின்றி பாஜக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது பாஜக 130, காங்கிரஸ் 55 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாஜகவை சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, கிரண் ரிஜிஜு, அனுராக் தாக்குர், பிரஹலாத் ஜோஷி, ஜோதிராதித்யா சிந்தியா, கிஷன் ரெட்டி, ஓம் பிர்லா மற்றும் கங்கனா ரணாவத், பசவராஜ் பொம்மை, சுரேஷ் கோபி, மஜத குமாரசாமி உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், சசி தரூர், சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளார்.
கட்சிவாரியாக வெற்றி விவரம்
பாஜக - 130
காங்கிரஸ் - 55
சமாஜ்வாதி - 19
திமுக - 5
ஐக்கிய ஜனதா தளம் - 4
மதசார்பற்ற ஜனதா தளம் - 2
திரிணமூல் காங்கிரஸ் - 10
தெலுங்கு தேசம் - 2
ஆம் ஆத்மி - 3
மார்க்சிய கம்யூ. - 3
சிவசேனை(உத்தவ்) - 3
சிவசேனை(ஷிண்டே) - 2
தேசியவாத காங்கிரஸ்(சரத்) - 1
ராம் விலாஸ் லோக் ஜனசக்தி - 1
ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் - 1
ராஷ்டிரிய லோக் தளம் - 1
ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி - 1
கேரள காங்கிரஸ் - 1
மதச்சார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா - 1
மக்கள் குரல் கட்சி - 1
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா - 1
கன்ஷி ராம் ஆசாத் சமாஜ் கட்சி - 1
ஜோரம் மக்கள் இயக்கம் - 1
ஏஐஎம்ஐஎம்(ஓவைசி) - 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...