கங்கனா ரணாவத், அனுராக் தாக்குர்.. வெற்றி!
மண்டி தொகுதியில் கங்கனா ரணாவத் 74,755 வாக்குகள் அதிகமாக வெற்றி பெற்றார்


ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அதிகாரபூர்வமாக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை காட்டிலும் 74,755 வாக்குகள் கூடுதலாக பெற்று அவர் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பாலிவுட் நடிகையாக அறியப்பட்ட கங்கனா முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

கங்கனாவின் வெற்றியை கொண்டாடிய பாஜகவினர்
முன்னிலை வகிக்கும்போது செய்தியாளர்களை சந்தித்தவர், சநாதனத்துக்கும் மோடி மக்கள் மீது வைத்த நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி இதுவெனத் தெரிவித்தார்.
ஒட்டுமொத்தமாக 5,37,022 வாக்குகள் அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதே மாநிலத்தில் ஹமிர்பூர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் 1,82,357 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ஹிமாச்சலில் உள்ள நான்கு தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கும் பாஜக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...