ஒடிசா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நவீன் பட்நாயக்

ஒடிசா முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நவீன் பட்நாயக்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் | கோப்பு
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் | கோப்பு

2000ஆவது ஆண்டு முதல் ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக், இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த மாநிலத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டில் இருந்து சுமார் 24 ஆண்டுகளாக, 5 முறை முதல்வராக பதவி வகித்த நவீன் பட்நாயக், தலைமையிலான பிஜு ஜனதா தளம் இம்முறை தோல்வியைத் தழுவியது.

காந்தபாஞ்சி, ஹின்ஜிலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட நவீன் பட்நாயக், காந்தபாஞ்சி தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். ஹின்ஜிலியில் வெற்றி பெற்றார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் | கோப்பு
இரு தொகுதிகளிலும் ராகுல் அபார வெற்றி!

ஒடிசா அரசியலில் கோலோச்சி வந்த நவீன் பட்நாயக், இப்போது பாஜகவிடம் ஆட்சியை இழந்துள்ளார். ஒருவேளை இத்தேர்தலில் வெற்றி பெற்று அவர் மீண்டும் முதல்வராகி இருந்தால், நாட்டின் நீண்ட கால முதல்வர் என்ற சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்திருப்பார்.

ஆனால், தேர்தலில் தனது கட்சி தோல்வியடைந்ததால், அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com