கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தோல்வி இறுதியானது அல்ல: அஜித் பவார்

News image
Updated On :5 ஜூன் 2024, 1:43 am

DIN

மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து கட்சி சுயபரிசோதனை செய்யும் என்று மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் என்சிபி மற்றும் மஹாயுதி கூட்டணி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் போட்டியிட்ட 4 தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் அஜித் பவார் தனது எக்ஸ் தளப் பதிவில், நாடாளுமன்றத்தில் தேவையான பெரும்பான்மையை தேசிய ஜனநாயக் கூட்டணி கடந்துவிட்டது.

பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகள். தோல்வி இறுதியானது அல்ல. கட்சித் தொண்டர்கள் புதிய உற்சாகத்துடன் மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து சுயபரிசோதனை செய்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு நடைபெற உள்ள பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வருவோம். ராய்காட் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக சுனில் தட்கரேவுக்கு வாழ்த்துகள்.

அருணாச்சலப் பிரதேசத்தில் என்சிபி மூன்று பேரவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் அமையும் தேசிய ஜனநாயக கூட்டணியின் புதிய அரசு இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.