
ஃபரிதாபாத் ரயில் நிலையம் அருகே நிலக்கரி கொண்டு சென்ற சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.
ஆக்ராவில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு தில்லியை நோக்கி சரக்கு ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் ஃபரிதாபாத் ரயில் நிலையம் அருகே திடீரென தடம் புரண்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், தடம் புரண்ட ரயிலின் 2 பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து ஏற்றப்பட்ட நிலக்கரியை அகற்றுவதற்காக ஜேசிபி ஒன்றும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. விபத்தைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் மதியம் வரை எந்த ரயில் சேவையும் இயக்கப்படவில்லை.
இருப்பினும், நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
முன்னதாக, மே 28ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள பால்கர் யார்டில் சரக்கு ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.