/

1 கோடியைத் தாண்டியது இன்ஸ்டாகிராமில் ராகுலைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை!

ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் சாதனை: பின்தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது.

News image
Updated On :7 ஜூன் 2024, 11:56 am

DIN

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.

காங்கிரஸ், கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் 52 இடங்களை மட்டுமே கைபற்றி இருந்த நிலையில் இந்த முறை 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

18-ஆவது மக்களவைத் தோ்தலில் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி, கேரள மாநிலம் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார்.

Story image

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.

ராகுல் காந்தியின் இன்ஸ்டாகிராம் விடியோக்கள் தினமும் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று இளைஞர்களிடம் சென்றடைவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ராகுலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 15 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.