எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாக அரவிந்த் சிங் பதவியேற்பு!

பிகார் ஆளுநர் ராஜேந்தி விஸ்வநாத் அர்லேகர் நீதிபதி சண்டேலுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

News image
Updated On :8 ஜூன் 2024, 6:11 am

DIN

பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாக அரவிந்த் சிங் சண்டேல் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிகார் ஆளுநர் ராஜேந்தி விஸ்வநாத் அர்லேகர் நீதிபதி சண்டேலுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் மூலம் மே 29 அன்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் இருந்து பாட்னா உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி சண்டேல் மாற்றப்பட்டார்.

1963இல் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் பிறந்த நீதிபதி சண்டேல் ராய்பூரில் உள்ள ரவிசங்கர் சுக்லா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டமும், பிலாஸ்பூரில் உள்ள குரு காசிதாஸ் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டமும் பெற்றார்.

சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் இணையதளத்தின்படி, ஆகஸ்ட் 26,1987ல் மத்தியப் பிதேசத்தில் உள்ள ஷாதோலில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் இரண்டாம் வகுப்பு சிவில் நீதிபதியாகச் சேர்ந்தார். அதன்பிறகு, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பல்வேறு இடங்களில் பல்வேறு பதவிகளில் துணை நீதித்துறையில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.