தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

3 கோடி வீடுகள் கட்ட நிதியுதவி: அமைச்சரவையில் ஒப்புதல்

ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்கு கூடுதல் நிதி அளிக்க முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.

News image
Updated On :10 ஜூன் 2024, 6:48 pm IST

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்துக்கு கூடுதல் நிதி அளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று (ஜூன் 10) ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலான இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

தகுதியான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கூடுதலாக 3 கோடி வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்ற பிறகு, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டணி கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நாடு முழுவதுமுள்ள ஏழை மக்களுக்கு மேலும் 3 கோடி வீடுகள் கட்டித்தர கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களுக்கு வீடு கட்ட நிதி அளித்து உதவும் வகையில் கடந்த 2015 - 16 முதல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் தகுதி வாய்ந்த மக்களுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இதுவரை 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான கழிப்பறை, எரிவாயு (எல்பிஜி) இணைப்பு, மின்சார இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்டவைகளுடன் இந்த வீடுகள் கட்டப்படுகின்றன.

தற்போது அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால், இத்திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்டப்படவுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி 3வது முறையாக பதவியேற்ற பிறகு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கும் திட்டத்திற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார்.

தற்போது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.