ஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

‘காஷ்மீர் விடுதலை’ முழக்கம்: எப்ஃஐஆர் பதிவு செய்த காவல்துறை!

காஷ்மீர் விடுதலை குறித்த சுவரெழுத்து: தில்லி துவாரகாவில் எஃப்ஐஆர் பதிவு

News image

படம்: ஐஏஎன்எஸ்

Updated On :11 ஜூன் 2024, 7:56 am

DIN

தில்லி துவாரகா பகுதியில் சுவரில் ‘காஷ்மீர் விடுதலை’ சுவரெழுத்து காணப்பட்டது தொடர்பாக காவலர்கள் செவ்வாய்க்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

துவாரகா செக்டர் 13-ல் அமைந்துள்ள தில்லி வளர்ச்சி ஆணையத்தின் பூங்காவில் வரையப்பட்ட சுவரெழுத்தை (கிராஃபிட்டி) திங்கள்கிழமை மாலை காவலர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின்படியும் சொத்துக்கு சேதம் விளைவித்தல் பிரிவின்படியும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அருகிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆராயும் பணி நடைபெற்று வருவதாகவும் குற்றம் செய்தவர்களை விரைவில் கைது செய்யவிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.