நான் சாதாரண மனிதன்; இந்தியாவிலுள்ள ஏழை மக்களே என் தெய்வம்! ராகுல் பேச்சு

இந்தியாவிலுள்ள ஏழை மக்களே என் தெய்வம் என்கிறார் ராகுல்
நான் சாதாரண மனிதன்; இந்தியாவிலுள்ள ஏழை மக்களே என் தெய்வம்! ராகுல் பேச்சு
-

வயநாடு: நான் ஒரு சாதாரண மனிதன், இந்தியாவில் உள்ள ஏழை மக்களே என் தெய்வம். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைத்தான் நான் செய்வேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு சென்று, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு விநோதமான பரமாத்மா இருக்கிறார். அவர், அதானி மற்றும் அம்பானிக்கு ஆதரவாக முடிவுகளை எடுக்குமாறு வழிநடத்துகிறார்.

ஆனால், நான் இயற்கையாக மனிதனாகப் பிறந்தவன். ஒரு சாதாரண மனிதன், இந்தியாவில் உள்ள ஏழை மக்களே என் தெய்வம், வயநாட்டில் உள்ள மக்களே என் தெய்வம், நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதைத்தான் நான் செய்வேன்.

எங்களது கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்கள், கட்சித் தொண்டர்கள், தலைவர்கள் பக்கம்தான் என் இதயம் உள்ளது, ஜனநாயகத்தை முன்னேற்றுவதற்கான எங்களது கூட்டு முயற்சிகள் அனைத்தும் உங்களை மகிழ்ச்சியடைய வைக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

நான் சாதாரண மனிதன்; இந்தியாவிலுள்ள ஏழை மக்களே என் தெய்வம்! ராகுல் பேச்சு
பிரியங்கா காந்தி போட்டியிட்டிருந்தால் மோடி தோற்றிருப்பார்: ராகுல்

தேர்தலில் இந்திய மக்கள் பேசியிருக்கிறார்கள், வெறுப்பை அன்பு வென்றிருக்கிறது, ஆணவத்தைக் கருணை தோற்கடித்திருக்கிறது என்றார்.

ராகுல்காந்தி கூறியிருப்பதாவது, வயநாடா? ரே பரேலி தொகுதி எம்.பி.யா என்பதில் இன்னமும் குழப்பமாகவே உள்ளது. துரதிருஷ்வசமாக, நான் பிரதமர் நரேந்திர மோடியைப் போல பரமாத்வாவால் வழிநடத்தப்படவில்லை. நான் ஒரு சாதாரண மனிதன். மோடிக்கு ஒரு விநோதமான பரமாத்மா இருக்கிறார். அவர், அம்பானிக்கும் அதானிக்கும் அதரவாக நடக்கும்படி அறிவுறுத்துகிறார். இன்று காலை, அந்த பரமாத்மா, மோடியிடம் மும்பை விமான நிலையத்தை அதானிக்குக் கொடுத்துவிடு என்று சொன்னால் உடனே அது அதானிக்குச் சென்றுவிடும். இப்படித்தான் விமான நிலையங்கள், மின்நிலையங்கள் என பலவும் அதானிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் ஒரு சாதாரண மனிதன், கடவுள் எனக்கு எந்த உத்தரவையும் இடுவதில்லை. எனக்கு இந்தியாவின் ஏழை மக்களே தெய்வம். வயநாடு மக்கள்தான் எனக்கு தெய்வம். எனவே, எனக்கு மக்களிடம் சென்று பேசுவது எளிது. நான் எடுக்கும் முடிவு இரு தொகுதி மக்களுக்குமே மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என ராகுல் பேசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com