
ஹைதராபாத்-அயோத்தி இடையிலான நேரடி விமான சேவையை ரத்து செய்வதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தொடங்கிய இரு மாதங்களிலேயே இந்த சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த விமான சேவையை நிறுத்த முடிவெடுத்ததாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி முதல் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
அதே நேரத்தில் சென்னையில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்டதையடுத்து அங்கு பக்தா்களின் வருகையும் அதிகரித்தது. இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு விமான சேவை தொடங்கப்பட்டது.
முன்னதாக, கடந்த டிசம்பா் 30-ஆம் தேதி அயோத்தியில் மகரிஷி வால்மீகி விமான நிலையத்தை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். ஜனவரி 21-ஆம் தேதி அயோத்தி ராமா் கோயில் பிராண பிரதிஷ்டை தினத்தில் தலைநகா் தில்லியில் இருந்து அயோத்திக்கு ஸ்பைஸ்ஜெட் விமான சேவை தொடங்கப்பட்டது.
மும்பை, சென்னை, அகமதாபாத், ஜெய்பூா், பெங்களூரு, பாட்னா, தா்பங்கா நகரங்களில் இருந்து அயோத்திக்கு விமான சேவையை அந்நிறுவனம் பிப்ரவரியில் தொடங்கியது. இரு மாதங்களுக்கு ஹைதராபாதில் இருந்து தொடங்கப்பட்ட அயோத்தி விமான சேவை மட்டும் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.