இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தீவிரவாதத்தை ஒழிக்க பேச்சுவார்த்தையே ஒரேவழி! ஃபரூக் அப்துல்லா

தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் ஒரேவழி என ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

News image
ஃபரூக் அப்துல்லா(கோப்புப்படம்)
Updated On :12 ஜூன் 2024, 11:36 am

DIN

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க முடியாது என முன்னால் ஜம்மு-காஷ்மீர் முதல்வரும், தேசிய மாநாடு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

ஜம்முவில் மூன்று நாட்கள் தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து வருகிறது.

பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், சாலையை விட்டு விலகி சென்ற பேருந்து, ரெய்சியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில், 9 பேர் பலியாகினர். மேலும், 41 பேர் காயமடைந்தனர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, டோடாவில் உள்ள கூட்டுச் சோதனைச் சாவடியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஆறு பாதுகாப்புப் பணியாளர்கள் காயமடைந்தனர்.

கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் செவ்வாய்க்கிழமை கொல்லப்பட்டார். என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்த சண்டையில் மத்திய காவல் படை அதிகாரி பலியானார்.

இந்த தாக்குதல் குறித்து தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபருக் அப்துல்லா கூறுகையில், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு இல்லாத வரை பயங்கரவாதம் முடிவுக்கு வரப்போவதில்லை. பயங்கரவாதம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும், நாம் அதை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதுதான் சோகம். அது துரதிர்ஷ்டவசமானது. நாம் விழித்துக்கொண்டு இதற்கு தீர்வு காணாவிட்டால் அதிகமான அப்பாவி மக்கள் தங்கள் உயிர்களை இழக்க நேரிடும். பேச்சுவார்த்தை தான் முன்னோக்கி செல்லும் ஒரே வழி” என்றார்.

இரண்டாவது முறை வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஜெய்சங்கர் , ‘பாகிஸ்தானில் இருந்து வெளிப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சீனாவுடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் மீதமுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்தியா கவனம் செலுத்தும்’ என்றும் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.