
ஒடிசாவில் எட்டு முறை எம்எல்ஏவாக இருந்த ரணேந்திர பிரதாப் ஸ்வைன் தற்காலிக அவைத்தலைவராகப் பதவியேற்றுக் கொண்டார்.
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ரகுபர் தாஸ் தற்காலிக அவைத் தலைவராக ரணேந்திர பிரதாப்புக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ரணேந்திர பிரதாப் பதவியேற்பு விழாவில் அந்த மாநில மோகன் மாஜீயும் கலந்துகொண்டார்.
முதல்வரின் பரிந்துரையின் பேரில் நான் தற்காலிக அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன் என்றார்.
கட்டாக் மாவட்டத்தில் உள்ள அதாகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான ரணேந்திர பிரதாப், ஒடிசா பேரவையின் அவைத்தலைவருக்கான தேர்தலை ஜூன் 20ல் நடத்துகிறார்.
மேலும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் ஜூன் 18, 19ல் தற்காலிக அவைத்தலைவரால் பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படுகின்றனர்.
ஒடிசா பேரவையில் அடுத்த அவைத்தலைவராக பாஜகவின் மூத்த தலைவர் சுரமபாதி தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.