அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்களிடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாபினைச் சேர்ந்த 29 வயதான ஜஸ்வீர் கவுர் மற்றும் 20 வயதான ககன்தீப் கவுர் இருவரும் அமெரிக்காவில் நியூஜெர்சியின் கார்டெரெட்டில் வசித்து வந்துள்ளனர். ஜஸ்வீர் கவுர் 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமெரிக்காவில் வசிப்பதாகவும், ககன்தீப் கவுர் கல்வி விசாவின் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில், பஞ்சாபில் ககன்தீப் கவுருடன் பயின்று வந்த 19 வயதான கௌரவ் கில்லுக்கும் ககன்தீப்புக்கும் இடையே, கடந்த ஜூன் 12ஆம் தேதியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தின்போது, ஜஸ்வீர் கவுர் தனது உறவினரான ககன்தீப்புக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கௌரவ் கில் இருவரையும் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் கௌரவ் கில், ஜஸ்வீரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். மேலும், ககன்தீப் படுகாயமடைந்துள்ளார் என்றும் தெரிகிறது. மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஜஸ்வீர் உயிரிழந்து விட்டதாகவும், ககன்தீப் சிகிச்சையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
தாக்குதல் நடத்திவிட்டு, கௌரவ் கில் அரை மைல் தூரம் வரையில் தப்பியோடியுள்ளார். இருப்பினும், காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். கௌரவ் கில் மீது பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண் வழக்குரைஞரை கத்தியால் குத்திய கணவா் கைது

பெண் வழக்குரைஞருக்கு கத்திக்குத்து: கணவா் தலைமறைவு

அச்சமற்ற புதிய அஸ்ஸாம் உருவாகும்: வாக்களித்தார் கௌரவ் கோகோய்!

அஸ்ஸாம் முதல்வருக்கு மாஃபியாவுடன் தொடர்பு: கௌரவ் கோகோய் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



