அஸ்ஸாம்: மனைவி இறந்த துக்கத்தில் உள்துறை செயலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
அஸ்ஸாமில் மனைவி இறந்த துக்கத்தில் உள்துறை செயலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.


அஸ்ஸாமில் உள்துறை செயலாளர் ஷிலாதித்யா சேத்தியா, தனது மனைவி இறந்த துக்கத்தில் மருத்துவமனையில் தன்னைத் தானே தற்கொலை செய்து கொண்டார்.
அஸ்ஸாமின் உள்துறைச் செயலர் ஷிலாதித்யா சேத்தியா செவ்வாய்க்கிழமை குவாஹாத்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அவரது மனைவி மூளையில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் செவ்வாய்க்கிழமை இறந்தார். இதனால் ஐபிஎஸ் அதிகாரியான ஷிலாதித்யா சேத்தியா, மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குள், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்” என்றார்.
2009-ம் ஆண்டு பேட்ச் இந்தியக் காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரியான ஷிலாதித்யா சேத்தியா, முன்னதாக டின்சுகியா மற்றும் சோனிட்பூர் மாவட்டங்களின் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், அஸ்ஸாம் காவல்துறையின் 4 வது பட்டாலியனின் கமாண்டன்டாகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
தற்கொலைகளைப் பற்றி விவாதிப்பது சிலருக்குத் தூண்டுதலாக இருக்கலாம். இருப்பினும், தற்கொலைகள் தடுக்கக்கூடியவை. நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளானாலோ அல்லது துன்பத்தில் இருக்கும் யாரையாவது பார்த்தலோ, சினேகா அறக்கட்டளையை அழைக்கவும் - 04424640050
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...