அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மே.வங்க ரயில் விபத்து: உயிரிழப்பு 10 ஆக உயர்வு!

பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று(ஜூன் 18) காலை உயிரிழப்பு!

News image
- படம் | பிடிஐ
Updated On :18 ஜூன் 2024, 8:20 am

DIN

மேற்கு வங்க ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையம் அருகே நேற்று(ஜூன் 17) காலை 8.45 மணியளவில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது அதே ரயில் பாதையில் வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணிகள் விரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு குழந்தை உள்பட 3 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிகுரியிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று(ஜூன் 18) காலை உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, விபத்துக்கு காரணமான சரக்கு ரயிலின் ஓட்டுநர், பயணிகள் ரயில் கார்டு உள்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோர் விபரங்கள் வருமாறு:

அனில் குமர்(46) - சரக்கு ரயிலின் ஓட்டுநர்,

ஆஷிஷ் தே(47) - பயணிகள் ரயில் கார்டு.

பயணிகள் விபரம்:

சுபஜித் மாலி(32)

செலேப் சுபா(36)

பியூட்டி பேகம்(41)

சங்கர் மோகன் தாஸ்(63)

விஜய் குமார் ராஜ்

மேலும் மூவர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விபத்துக்குள்ளான் கஞ்சன்ஜங்கா பயணிகள் விரைவு ரயில் மீதமுள்ல பெட்டிகளில் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று(ஜூன் 18) அதிகாலை 3.20 மணியளவில் கொல்கத்தாவிலுள்ள சியால்தஹ் ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.