பிரஜ்வீர் என்பவர் தனது காதலி, வேறொருவருடன் தொடர்பிலிருப்பதைக் கண்டித்ததால், பிரஜ்வீரை கொலை செய்த காதலி கவிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 40 வயதான பிரஜ்வீர் என்பவருடன், 38 வயதான கவிதா சாஹர் (முன்னரே வேறொருவருடன் திருமணமானவர்) 2007 முதல் 10 ஆண்டுகளாக லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர், கவிதா ஆக்ரா சென்றுள்ளார்; அங்கு சுரேந்திர சாஹர் என்பவருடனும் நட்பு கொண்டு, லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். இதனையறிந்த பிரஜ்வீர், கவிதாவிடம் சுரேந்திர சாஹருடனான உறவினை முறித்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளார். இருப்பினும், கவிதா பிரஜ்வீரின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியுள்ளார்.
இதனால் கோபமுற்ற பிரஜ்வீர், 2019ஆம் ஆண்டில் சுரேந்திர சாஹர் நடத்தி வந்த ஆடைக் கடைக்கு தீ வைத்துள்ளார். இதனையடுத்து, ஆடைக் கடை மீது பிரஜ்வீர் தீ வைத்ததாகக் கூறி, கவிதா காவல்துறையிடம் புகார் அளித்ததையடுத்து, பிரஜ்வீர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இருந்தபோதிலும் பிரஜ்வீர், கவிதாவை எச்சரித்தும், அவரது தற்போதைய காதலன் சுரேந்திராவுடன் வாழ்வதைத் தடுத்தும் உள்ளார்.
பிரஜ்வரீன் இந்த துன்புறுத்தலால், பிரஜ்வீரை கவிதா கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதாவது, ஜூன் 15ஆம் தேதியில் பிரஜ்வீரைச் சந்தித்து, கவிதா மற்றும் அவரது நண்பர்கள் அதுல், ரோஹித், சோனு ஆகியோர் பிரஜ்வீரை ஒரு பேஸ்பால் மட்டை மற்றும் பீர் பாட்டிலைக் கொண்டும் தாக்கியதில் பிரஜ்வீர் உயிரிழந்துள்ளார். பின்னர், பிரஜ்வீரின் உடலை ரோட்டா கால்வாய் அருகே வீசியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஆக்ராவின் மால்புரா பகுதியில் ஜூன் 15ஆம் தேதியில் பிரஜ்வீரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், கவிதாவுடனான உறவு காரணமாக பிரஜ்வீரை நிராகரித்த அவரது குடும்பத்தினர், அவருடன் இனி எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, பிரஜ்வீரின் உடலை வாங்க மறுத்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கவிதா தான் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, கவிதாவும் அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா!

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

அழகாகக் காதலைச் சொல்கிறேன் என்று கூறி காதலனை கட்டிவைத்து எரித்த காதலி!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



