
கான்பூரில் உள்ள நானா ராவ் பூங்காவில் கடுமையான வெப்பம் காரணமாக பல வெளவால்கள் இறந்து கிடந்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நானா ராவ் உயிரியல் பூங்காவில் நூற்றுக்கணக்கான வௌவால்களின் இறந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதிக வெப்பத்தால் மரங்களில் இருந்து கீழே விழுந்த வௌவால்கள், தரையில் விழுந்து துடித்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
45 டிகிரி செல்சியஸ்ஸுக்கும் மேல் வெப்பநிலை நிலவுவதால், பூங்காவில் வெளவால்கள் அதிக அளவில் இறந்து வருவதாகவும், இதனால் பூங்கா முழுவதும் துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
கான்பூர் உயிரியல் பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவ அதிகாரி டாக்டர் அனுராக் சிங் கூறுகையில், வெளவால்கள் மனிதர்களை விட இரண்டு டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலையை உணருவதால் அவை மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
கான்பூரில் வெப்பநிலை 44 முதல் 45 டிகிரி செல்சியஸைத் தாண்டும் போது, வெளவால்கள் அதை 47 முதல் 48 டிகிரியாக அனுபவிக்கின்றன. போதுமான நீர் ஆதாரங்கள் இல்லாததால் அவற்றின் இறப்பு அதிகரிக்கிறது. இது வெப்பவாதத்திற்கு வழிவகுக்கிறது. வெளவால்கள் இறப்பதைத் தடுக்க, மரங்களுக்கு அடியில் உள்ள பகுதிகளில் தண்ணீரை நிரப்ப வேண்டும். இதனால், அவை அதிப்படியான வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.