பணியிடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
பிகாரில் கால் சென்டரில் பயிற்சிபெறச் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை


பிகாரில் வேலைக்குச் சென்ற பெண்ணை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளத்தின் ஆட்சி நடைபெறுகிறது. பிகாரின் முசாபர்பூர் நகரில், ஒரு கால் சென்டரில் வேலைவாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, டி.பி.ஆர். நெட்வொர்க்கிங் என்ற நிறுவனம் முகநூல் உள்பட சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டது. ஆனால், விண்ணப்பதாரர்கள் பெண்களாக இருக்கவேண்டும் என்றும், விண்ணப்பதாரர்களின் எதிர்காலம் பிரகாசிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது. இந்த நிறுவனத்தில் வேலைசெய்ய விரும்புவோர் பயிற்சிக் கட்டணமாக ரூ.20,000-ஐ முசாபர்பூர் சென்று அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டது.
இந்த விளம்பரத்தினால் கவரப்பட்ட பெண் ஒருவர், இந்த வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். வேலையின் பயிற்சிக்காக முசாபர்பூர் சென்ற அவர், தான் அங்கு மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் மற்றும் அந்த நிறுவனம் மோசடி செய்வதாகவும் காவல்துறையினரிடம் ஜூன் 2ஆம் தேதியில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையில் அளித்த புகாரில் அவர் தெரிவித்ததாவது, ”முசாபர்பூரில் உள்ள அந்த நிறுவனத்தின் மையத்தில் சுமார் 150 பெண்கள் இருந்தனர். அங்கிருந்த அனைத்து பெண்களும், வாடிக்கையாளர்களுக்கு போன் கால் செய்வதற்கும், வாடிக்கையாளர்களை எவ்வாறு மோசடிகளில் சிக்கிக் கொள்ளவைப்பது போன்று ஏமாற்றுவதற்கும் பயிற்சி பெற்று வந்தனர். மேலும், வேலை செய்துவந்த பெண்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணி இலக்குகளை முடிக்கத் தவறியபோது, பெண்கள் மனதளவில் சித்திரவதை செய்யப்பட்டனர். தானும் பணி இலக்குகளை தவறவிட்டபோது, திலக் குமார் சிங் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறினார். திலக் குமார் சிங் பல சந்தர்ப்பங்களில் அவருடன் உடலுறவு கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதுடன், தான் கருவுற்றபோது கருக்கலைப்பும் செய்யச் சொன்னார்” என்று கூறியுள்ளார்.
அந்த பெண் அளித்த புகாரில் 9 பேர் மீது குற்றம் சாட்டியுள்ளார். முக்கியமாகக் குற்றம் சாட்டப்பட்டவரான மணிஷ் குமார் சிங் நொய்டாவில் வசிக்கிறார். அவர்தான் நிறுவனத்தின் உரிமையாளர் என்றும் கூறப்படுகிறது. அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் திலக் குமார் கைது செய்யப்பட்டு, மீதமுள்ள 8 பேர் தேடப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...