ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்
ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் Center-Center-Delhi

கேஜரிவாலுக்கு பிணை மறுப்பு: ஆம் ஆத்மி கண்டனம்!

அரவிந்த் கேஜரிவாலுக்கு பிணை மறுக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

பணமோசடி வழக்கில் பிணை வழங்கிய விசாரணை நீதிமன்ற உத்தரவை தில்லி உயர்நீதிமன்றம் நிறுத்திவைத்ததையடுத்து ஆத் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சஞ்சய் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

மோடி அரசாங்கத்தின் போக்கிரித்தனத்தைப் பாருங்கள் விசாரணை நீதிமன்றத்தில் உத்தரவு வரவில்லை, உத்தரவின் நகல் கூட வரவில்லை, ஆனால் மோடியின் அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தை அடைந்தது. இந்த நாட்டில் என்ன நடக்கிறது? முழு நாடும் உங்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறது.

உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு தனது வழக்கை வாதிட சரியான வாய்ப்பு வழங்கப்படவில்லை. விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரினர்.

ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்
அசாம் கனமழைக்கு 4 லட்சம் பேர் பாதிப்பு: 36 பேர் பலி!

கேஜரிவாலுக்கு பிணை மறுக்கப்பட்டது கண்டனத்துக்குரியது என்றும் தனது எக்ஸ் தளத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

கலால் ஊழலில் இருந்து உருவான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வர் கேஜரிவால் மார்ச் 21ல் அமலாத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பிணை கோரி அவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

முன்னதாக நேற்று காலை கேஜரிவாலுக்கு பிணை மறுக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை சிறப்பு நீதிபதியால் பிணை வழங்கப்பட்டது.

ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங்
பணவரவு நிச்சயம் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணைக்கு எதிரான மனு மீதான விசாரணை முடிவடையும் வரை கேஜரிவாலுக்கு பிணை வழங்கி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தில்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபட ஜூன் 1 வரை 15 நாள்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தில்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் தில்லியில் ஒரு தொகுதியில் கூட ஆம் ஆத்மி வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com