ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சொன்னபடி சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு

பேரவைக்கு வரமாட்டேன் என சொன்னபடி சபதத்தை நிறைவேற்றினார் சந்திரபாபு நாயுடு

News image
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
Updated On :21 ஜூன் 2024, 10:32 am

DIN

நான் மீண்டும் ஆட்சிக்கு வரும் வரை சட்டப்பேரவைக்கு வர மாட்டேன் என்று கூறியபடி, இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்வர் பதவியேற்றுக்கொண்டு ஆந்திர பேரவைக்கு வந்துள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.

கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே ஆந்திர சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம் ஏற்பட்டு, பேரவையிலிருந்து வெளியேறினார் சந்திரபாபு நாயுடு.

அப்போது, தான் முதல்வராக பதவியேற்கும் வரை, மீண்டும் சட்டப்பேரவைக்கு வரமாட்டேன் என்று சபதம் எடுத்திருந்தார். அவர் சபதம் எடுத்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அவர் தனது சபதத்தை நிறைவு செய்துள்ளார். ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட சந்திரபாபு நாயுடு பேரவைக்கு வருகை தந்தார்.

5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் பல சட்ட நடவடிக்கைகளை சந்தித்துவந்தார் சந்திரபாபு நாயுடு.

தற்போது, பாஜக மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆந்திர முதல்வராகியிருக்கிறார். முதல்வராகி, மீண்டும் ஆந்திர பேரவைக்குத் திரும்பி, தனது சபதத்தை முடித்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

முன்னதாக, ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதி உருவாக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார். விசாகப்பட்டினம் பொருளாதார தலைநகராகவும், மேம்பட்ட சிறப்பு நகரமாகவும் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.