லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 6 பேர் கைது!

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் 6 பேரை பிகார் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

News image
Updated On :22 ஜூன் 2024, 10:39 am

DIN

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தொடர்புடைய 6 பேரை ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தில் பிகார் காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

இதுகுறித்து பிகார் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ரித்விக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “வெள்ளிக்கிழமை இரவு தேவிபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள எய்ம்ஸ்-தியோகர் அருகே உள்ள ஒரு வீட்டில் இருந்து எங்களுக்கு கொடுத்த தகவலின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். சந்தேகப்படும்படி உள்ளவர்கள் அனைவரும் பிகாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் ஜுனு சிங் என்பவரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்” என்றார்.

கைது செய்யப்பட்டவர்களில் பிட்டு என்கிற பரம்ஜித் சிங், பல்தேவ் குமார் என்கிற சிந்து, காஜு என்கிற பிரசாந்த் குமார், அஜித் குமார், கரு என்கிற ராஜீவ் குமார் ஆகியோர் பிகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட நீட்-யூஜி தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்வை சுமார் 24 லட்சம் பேர் எழுதினர்.

ஜூன் 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானபோது பிகார் போன்ற மாநிலங்களில் வினாத் தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.