
இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் சீன டிரோனை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
பஞ்சாபின் தார்ன் தரன் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் டிரோன் ஒன்று பறந்து வருவதாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
நுர்வாலா என்ற கிராமத்திற்கு அருகே வயல்வெளியில் டிரோன் இருப்பதைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். அதனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது அது சீனத்தில் தயாரிக்கப்பட்ட டிரோன் என்று தெரியவந்தது.
முதற்கட்டமாக சீனாவில் தயாரிக்கப்பட்ட டிஜிஐ மேவிக்3 கிளாசிக் டிரோன் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாப் எல்லையில் வெளிநாட்டு டிரோன்கள் அடிக்கடி பறிமுதல் செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.