

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் பஞ்சாப் பதான்கோட் காவல்துறையும் இணைந்து சோதனை நடத்தியது.
இந்த நிலையில், எல்லைப் பகுதியான நரோட் ஜெய்மால் சிங் அருகே 3 ஏகே-47 துப்பாக்கிகள், 2 கைத் துப்பாக்கிகள், 98 தோட்டாக்கள், வெடிமருந்து உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது.
இவை யாவும், மாநிலத்தில் சீர்குலைப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதியான ரிண்டா என்பவர்தான், இந்த ஆயுதங்களை அனுப்பி வைத்திருக்கக் கூடும் என்று உளவுத் துறை தெரிவித்திருப்பதாக டிஐஜி சந்தீப் கோயல் கூறினார். பாகிஸ்தானின் உளவுத் துறை நிறுவனமான ஐஎஸ்ஐ-யின் முழு ஆதரவுடன் ரிண்டா செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
எல்லைப் பகுதியில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும் கைதுசெய்ய பல இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த வலையமைப்பை (பயங்கரவாத அமைப்பு) உடைக்கவும், எதிர்கால அச்சுறுத்தல்களைத் தடுக்கவும் காவல்துறையும் பாதுகாப்பு அமைப்புகளு தீவிரமாக பணியாற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.