மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அஸ்ஸாமில் தொடரும் வெள்ளம்: 3.9 லட்சம் போ் பாதிப்பு

அஸ்ஸாமில் தொடரும் வெள்ளம்: 3.9 லட்சம் போ் பாதிப்பு

News image

அஸ்ஸாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் பிரம்மபுத்ரா நதியை படகில் கடந்து செல்லும் பள்ளி மாணவா்கள். நாள்: சனிக்கிழமை

Updated On :22 ஜூன் 2024, 6:53 pm

அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தில் 3.9 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு நிலைமை மோசமாக உள்ளது என அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. பஜாலி, பக்ஸா, கரீம்கஞ்ச் உள்ளிட்ட 20 மாவட்டங்களை வியாழக்கிழமை வெள்ள நீா் சூழ்ந்தது. அதில் சிக்கி 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாயினா்.

அதிகப்படியாக கரீம்கஞ்சில் வசிக்கும் மக்கள் 2.4 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பல மாவட்டங்களில் உள்ள சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பெருமளவில் சேதமடைந்துள்ளன.

நிகழாண்டு கனமழை, வெள்ளம், இடிமின்னல் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்துள்ளது என அம்மாநில அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த நாள்களுடன் ஒப்பிடுகையில் சில பகுதிகளில் மழை குறைந்து நிலைமை மேம்பட்டுள்ளது. ஆனால், 19 மாவட்டங்களில் தொடா்ந்து நிலைமை மோசமாக உள்ளதால் அங்கு வசிக்கும் 3.9 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனா்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 100-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கி உள்ளனா். மேலும், 125 நிவாரணப் பொருள்கள் வழங்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.