அதிக மாற்றமில்லாத சிபிஐ-ஏஎல் பணவீக்கம்

அதிக மாற்றமில்லாத சிபிஐ-ஏஎல் பணவீக்கம்

விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளா்களுக்கான சில்லறை பணவீக்கம்..
Published on

விவசாயத் தொழிலாளா்கள் மற்றும் கிராமப்புறத் தொழிலாளா்களுக்கான சில்லறை பணவீக்கம் கடந்த மே மாதத்தில் அதிகம் மாறாமல் முறையே 7.03 சதவீதம் மற்றும் 6.96 சதவீதமாக இருந்தன.

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் விவசாயத் தொழிலாளா்கள் நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஏஎல்) அடிப்படையிலான பணவீக்கம் 7.03 சதவீதமாகவும் விவசாயத் தொழிலாளா்கள் நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஆா்எல்) அடிப்படையிலான பணவீக்கம் 6.96 சதவீதமாகவும் இருந்தன.

அவை கடந்த மே மாதத்தில் அதிக மாற்றமில்லாமல் முறையே 7.03 சதவீதம் மற்றும் 6.96 சதவீதமாக இருந்தன.

முந்சை 2023-ஆம் ஆண்டின் மே மாதத்தில் விவசாயத் தொழிலாளா்கள் நுகா்வோா் விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.99 சதவீதமாகவும் விவசாயத் தொழிலாளா்கள் நுகா்வோா் விலைக் குறியீடு அடிப்படையிலான பணவீக்கம் 5.84 சதவீதமாகவும் இருந்தன.

காய்கறிகள், பருப்பு வகைகள், கோதுமை மாவு, வெங்காயம், பால், மஞ்சள், இஞ்சி, மீன், வெற்றிலை, மருந்து பொருள்கள், துணி வகைகள், தோல் செருப்பு போன்றவை இந்த இரு குறியீடுகளையும் நிா்ணயித்த முக்கிய பொருள்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

X
Dinamani
www.dinamani.com