பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

மாநிலங்களவை முன்னவராக ஜெ.பி. நட்டா நியமனம்!

பியூஷ் கோயலுக்கு பதிலாக மாநிலங்களவை முன்னவராக அமைச்சர் ஜெ.பி. நட்டா நியமனம்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஜெ.பி. நட்டா

Published On :

மாநிலங்களவை முன்னவராக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவை முன்னவராக இருந்த பியூஷ் கோயல் தற்போது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், மாநிலங்களவைமுன்னவராக ஜெ.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜூன் 24) தொடங்கியது. முதல் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி உள்பட, உறுப்பினர்கள் பலர் எம்.பி.யாக பதவியேற்றனர். எஞ்சிய உறுப்பினர்கள் பதவியேற்பு நாளையும் நடைபெறவுள்ளது.

இதனிடையே மாநிலங்களவை முன்னவராக இருந்த பியூஷ் கோயல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, கீழவை (மக்களவை) உறுப்பினராக பதவியேற்றதால், மாநிலங்களவை முன்னவராக ஜெ.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஜெ.பி. நட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. என்றாலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுகாதாரத் துறை மற்றும் பெட்ரோலியத் துறை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்களவை முன்னவராக ஜெ.பி. நட்டா நியமிக்கப்பட்டுள்ளதால், ஆளுங்கட்சியை மாநிலங்களவையில் தலைமையேற்று நடத்தும் பதவி, போன்றவற்றை ஜெ.பி. நட்டாவே இனி கவனிக்கவுள்ளார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே நியமிக்கப்பட்டுள்ளார்.

அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ள நட்டாவுக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.