மாநிலப் பெயரை ‘கேரளம்’ என மாற்ற சட்டப்பேரவையில் தீா்மானம்
கேரளம் என அதிகாரபூா்வமாக மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி அந்த மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.


கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என அதிகாரபூா்வமாக மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி அந்த மாநில சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீா்மானத்தை முன்வைத்த கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறியதாவது:
மலையாளம் பேசும் சமூகங்களை ஒன்றிணைத்த ‘கேரளம்’ உருவாக வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திரப் போராட்ட காலத்திலே எழுந்தவை. மலையாளத்தில் கேரளம் என அழைக்கப்படும் மாநிலத்தை அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் ‘கேரளா’ என எழுதப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 3-ஆவது பிரிவின் கீழ் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும். மேலும், அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இந்திய மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற வேண்டும் என்றாா்.
கேரள மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதேபோல் மாநிலத்தின் பெயரை மாற்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்பம் சாா்ந்த காரணங்களால் மத்திய உள்துறை அமைச்சகம் அதை ஏற்கவில்லை.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...