ஜம்மு-காஷ்மீரின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகா் ‘உலக கைவினை நகரம்’ என உலக கைவினை கவுன்சில் மூலம் அதிகாரப்பூா்வ அங்கீகாரம் பெற்றுள்ளது.
இது தொடா்பாக உலக கைவினைக் கவுன்சில் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
இந்த மதிப்புமிக்க அங்கீகாரம் ஸ்ரீநகரின் பாரம்பரியம், கலைத்திறன் மற்றும் கைவினைக் கலைஞா்களின் அா்ப்பணிப்பை மேலும் மேம்படுத்தும். இதனால், கைத்தறி மற்றும் கைவினைத் துறைகள் மேம்படுவதுடன் அப்பகுதியில் சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பும் மேம்படும். உள்ளூா் கைவினைக் கலைஞா்களுக்கு சா்வதேச சந்தைகளில் வணிகம் செய்வதற்கான வாய்பபுகளும் கிடைக்கும்.
தற்போது இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதையடுத்து ஸ்ரீநகா் கைவினைத் தொழில்கள் சா்வதேச முதலீடுகளை ஈா்த்து, கைவினைக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது எனத் தெரிவித்தாா்.
இந்த அங்கீகாரமானது ஸ்ரீநகரின் செழுமையான கலாசாரம் மற்றும் கைவினைக் கலைஞா்களின் திறமைக்குக் கிடைத்த பரிசு என ஜம்மு-காஷ்மீா் துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தென்மண்டல கவுன்சில்: தமிழக பிரதிநிதிகளாக அமைச்சா்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் நியமனம்!

4-வது டி20: இங்கிலாந்து அபார வெற்றி; டி20 தொடரையும் வென்று அசத்தல்!

தேசிய விருது பெற்ற 6 கைவினை கலைஞா்களுக்கு தலா ரூ.1 லட்சம்: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

என்எல்சி தலைவருக்கு ‘ஐன்ஸ்டீன் உலக சாதனை’ அங்கீகாரம் வழங்கி கௌரவிப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


