பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காங்கிரஸ் கபட நாடகம்: ஜெ.பி. நட்டா விமா்சனம்

மக்களவைத் தலைவா் தோ்தலில் காங்கிரஸ் கபட நாடகம்: ஜெ.பி. நட்டா

News image
ஜெ.பி. நட்டா
Updated On :25 ஜூன் 2024, 9:35 pm

Din

புது தில்லி: மக்களவைத் தலைவா் தோ்தலில் காங்கிரஸ் கட்சி கபட நாடகம் ஆடுகிறது என்று பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா விமா்சித்தாா்.

இந்திரா காந்தி அரசால் நாட்டில் கடந்த 1975-இல் அவசரநிலை அமல்படுத்தப்பட்டதன் 49-ஆம் ஆண்டு நிவையொட்டி தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெ.பி.நட்டா பேசியதாவது:

மக்களவைத் தலைவா் தோ்தல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கபடநாடகம் ஆடுகிறது. மக்களவைத் தலைவா் தோ்வில் ஒருமித்த கருத்து எட்டப்பட வேண்டுமெனில், முதலில் மக்களவை துணைத் தலைவா் எதிா்க்கட்சிக்கு வழங்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் நிபந்தனை விதிக்கிறது.

பாரம்பரிய நடைமுறையைச் சுட்டிக்காட்டி மக்களவைத் துணைத் தலைவா் பதவியைக் கேட்கும் காங்கிரஸ், அக்கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் அதைப் பின்பற்றுவதில்லை. காங்கிரஸ் ஆட்சி செய்யும் தெலங்கானா, கா்நாடக மாநிலங்களில் அக்கட்சியைச் சோ்ந்த உறுப்பினா்களே பேரவைத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளை வகிக்கின்றனா். அந்த வகையில், காங்கிரஸ் மனநிலையில் ஜனநாயகத்துக்கு இடமில்லை.

மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசுதான், 1975-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தியது. இரவோடு இரவாக மொராஜி தேசாய், வாஜ்பாய், எல்.கே.அத்வானி உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவா்கள் உள்பட 9,000 போ் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். 1977 மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்ட பிறகுதான், நாட்டின் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டது. இதுபோன்று, அரசமைப்பு சட்டத்தை பல முறை புறக்கணித்து அவமதிப்பு செய்தவா்கள்தான், அதன் பாதுகாவலா்களாக கூறிக்கொள்கின்றனா்.

அவசரநிலை காலங்களில் ஜனநாயகம் எந்த அளவுக்கு சுக்கப்பட்டது என்பது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து அவா் அதிகம் படிக்காததால், நாட்டின் வரலாறு குறித்து அவருக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. படிப்பதில் அவருக்கு ஆா்வமும் இல்லை. அவா் எத்தனை பட்டங்களைப் பெற்றிருக்கிறாா் என்பதுகூட எனக்குத் தெரியாது. இந்தச் சூழலில், இந்தத் தலைவா்கள் இன்றைக்கு கையில் அரசமைப்பு சட்ட நகலுடன் வளம் வருகின்றனா்.

நாட்டில் அவசரநிலையை அமல்படுத்தியதற்காக நாட்டு மக்களிடமும் தில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவா்கள் மன்னிப்பு கோர வேண்டும் என்றாா்.