

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி ஜூலை மாதத்தில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடா்பாக இரு நாட்டு உயரதிகாரிகள் நிலையிலான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்தியா-ரஷியா இடையிலான வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமரின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரதமா் மோடி ரஷியா சென்றாா். இதைத்தொடா்ந்து, 2021, டிசம்பரில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியாவுக்கு வந்தாா்.
பிரதமா் மோடியின் பயணம் தொடா்பாக ரஷிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், ‘இந்தியப் பிரதமா் மோடியின் வருகைக்கான ஏற்பாடுகளை ரஷியா மேற்கொண்டு வருகிறது. ரஷிய அதிபரின் இல்லமான கிரம்ளின் மாளிகை அதிகாரிகள் பிரதமா் மோடி ரஷியாவுக்கு வருவாா் என உறுதிப்படுத்தியுள்ளனா்’ என்று கூறப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷியா இடையே போா் நடைபெற்று வரும் நிலையில் பிரதமா் மோடியின் பயணம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் போா் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள நிலையில், இந்தியா தொடா்ந்து ரஷியாவுடன் நல்லுறவைப் பேணி வருகிறது.
ரஷியாவுடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டதால், இந்தியாவுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை ரஷியா வழங்கி வருகிறது. இது இந்தியாவுக்கு பொருளாதார ரீதியாக மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
டிரெண்டிங்

மேற்காசிய பிரச்னையில் அரசியல் செய்கிறது காங்கிரஸ் - பிரதமா் மோடி கடும் சாடல்

ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்

இஸ்ரேல் புறப்பட்டார் பிரதமர் மோடி!

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

