தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெண் உடை எதற்கு? தற்கொலை செய்துகொண்ட விமான நிலைய அதிகாரி!

தற்கொலை செய்துகொண்டது ஏன்? பெண் உடை அணிந்திருந்தது ஏன்? என்பது குறித்து விசாரணை தொடக்கம்.

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜூன் 2024, 12:37 pm

DIN

உத்தரகண்ட்டில் விமான நிலைய ஆணைய அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அறையிலிருந்து அவரின் உடல் மீட்கப்படும்போது அவர் பெண் உடை அணிந்திருந்தார்.

அதிகாரி தற்கொலை செய்துகொண்டது ஏன்? பெண் உடை அணிந்திருந்தது ஏன்? என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் விமான நிலையத்தில் ஆணைய அதிகாரியாக இருந்தவர் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்டபோது உதட்டுச்சாயம், வளையல், பொட்டு போன்றவற்றுடன் பெண் உடையும் அணிந்திருந்தார்.

ஆசிரியையான அவரின் மனைவி அம்மாநிலத்தின் பித்தோரகர் பகுதியில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.

இது குறித்து பேசிய உத்தம்சிங் நகர் காவல் சிறப்பு கண்காணிப்பாளர் மஞ்சுநாத், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரியும் நபர்கள் அழைப்பின்பேரில் விமான நிலைய அதிகாரியின் அறை திறக்கப்பட்டது.

அப்போது அவர் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றோம். எனினும் அவர் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவர் தற்கொலையில் எந்தவித வற்புறுத்தலும் தெரியவில்லை. அறை உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. அவரின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை. அதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.

விமான நிலைய அதிகாரி தனது இரு உறவினர்களுடன் இரவு தங்கியுள்ளார். உறவினர்கள் ஒரு அறையிலும், அதிகாரி மற்றொரு அறையிலும் தங்கியுள்ளார். பின்னிரவு வரை மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததாகவும், காலையில் அருகிலுள்ள மாம்பழத் தோட்டத்துக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

காலையில் அவருக்கு அழைத்தபோது எந்தவித பதிலும் கிடைக்காததால், சந்தேகமடைந்த உறவினர்கள், அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் தங்கியிருந்த நண்பர்களை (உடன் பணிபுரிபவர்கள்) அழைத்துள்ளனர். அவர்கள் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் கதடை உடைத்துப் பார்த்தபோது அதிகாரி தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார்

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பணியில் மிகுந்த அக்கறையும் கவனமும் உடையவர் என்ற உடன் பணியாற்றும் நண்பர்கள் தெரிவித்தனர். எனினும் ஏன் அவர் உதட்டுச்சாயம், வளையல் மற்றும் பெண் உடை அணிந்திருந்தார் என விசாரணைக்குப் பிறகே தெரியவரும். தற்கொலைக்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனையில் முடிவாகும் எனக் கூறினார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.