
பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷனுடன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை பவித்ரா, தடயங்களை சேகரிக்க அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது மேக்-அப் போட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் காவல்துறை பெண் உதவி ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜூன் 16ஆம் தேதி ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வீட்டுக்கு, குற்றம் நடந்ததை நடித்துக் காட்ட காவல்துறையினர் பவித்ராவை அழைத்துச் சென்றனர்.
பிறகு வெளியே வந்த போது, அங்கிருந்த செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் விடியோக்களை எடுத்தனர். அதில், பவித்ரா சிரித்தபடி முழு மேக்-அப்பில் இருந்துள்ளார்.
தொலைக்காட்சிகளில் வெளியான விடியோக்களைப் பார்த்த காவல்துறை உயர் அதிகாரிகள், பவித்ரா அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கே அவரை மேக்-அப் போட அனுமதித்த காவல்துறை பெண் அதிகாரிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
இதற்கு விளக்கம் அளித்த காவல்துறை அதிகாரிகள், பவித்ரா, வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்டதாகவும், அங்கு சென்றபோதுதான் அவர் மேக்-அப் போட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும், அவர் கைது செய்யப்பட்டு பெண்கள் தங்கும் விடுதியிலிருந்து வந்த போதும் மேக்-அப் போட்டிருந்ததாகவும், அவர் அங்கு மேக்-அப் சாதனங்களை வைத்திருக்கலாம் என்றும் கூறியதைத் தொடர்ந்து விசாரணை தொடங்கியிருக்கிறது.
ரேணுகாசாமி என்ற ரசிகரின் கொலை வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.