மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட் வினாத்தாள் கசிவு: பாட்னாவில் 2 பேரை கைது செய்தது சிபிஐ

நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், பாட்னாவில் 2 பேரை கைது செய்தது சிபிஐ

News image
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது நடவடிக்கை
Updated On :27 ஜூன் 2024, 10:51 am

DIN

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கில், பாட்னாவில் இரண்டு பேரை கைது செய்துள்ள சிபிஐ அதிகாரிகள் காவலில் வைத்துள்ளனர்.

நீட் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைகளையும் கொடுத்து, அவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு முன்பு, தங்குமிடம் கொடுத்ததாக, மணீஷ் குமார், அஷுதோஷ் குமார் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடு வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு, முதல் கைது நடவடிக்கையாக அமைந்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஆறு முதல் தகவல் அறிக்கைகளைப் பதிவு செய்திருக்கும் சிபிஐ, குஜராத், பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்தான், தேர்வு மையமாக இருந்த பள்ளிகளுக்கும், வினாத்தாளைக் கொண்டு சென்ற கொரியர் நிறுவனம், அதனைப் பெற்றுக்கொண்ட அரசு அதிகாரிகள் என அனைவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த மே 5-ஆம் தேதி நாடு முழுவதும் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கான நீட் தோ்வு நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, தேர்வு முடிவு வெளியான நாள் என அனைத்துமே சர்ச்சையாக மாறியது.

இதுதொடா்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய கல்வித் துறை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து வினாத்தாள் கசிவு, தோ்வில் ஆள்மாறாட்டம், தோ்வா்கள், தோ்வுக்கூட கண்காணிப்பாளா்கள் செய்த மோசடி என குஜராத், ராஜஸ்தான் மற்றும் பிகாரில் காவல் துறையினா் விசாரித்து வந்த வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில்தான் பிகார் மாநிலம் பாட்னாவில் இரண்டு பேரை சிபிஐ இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.