தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

7 ஆம் வகுப்பு புத்தகத்தில் தமன்னா பற்றிய பாடத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு!

பெங்களூருவில் நடிகை தமன்னா பற்றிய பாடத்துக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News image

தமன்னா பாட்டியா

(கோப்புப்படம்)

Updated On :27 ஜூன் 2024, 10:01 am

DIN

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பாடத்தில் நடிகை தமன்னா பற்றிய பாடத்துக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தின் பெங்களூருவில் ஹெப்பால் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பாடத்தில் ‘சிந்துவில் பிரிவினைக்குப் பிறகு மக்களின் வாழ்க்கை’ என்ற அத்தியாத்தில் நடிகை தமன்னா பற்றிய பாடத்துக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், இந்த விஷயத்தை பள்ளி நிர்வாகத்திடம் கொண்டு சென்றும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், கர்நாடக மாநில தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு ஆணையத்திடம் தொடர்பு கொண்டுள்ளோம். அந்த அத்தியாயத்தில் சிந்தி சமூகத்தில் உள்ள வெற்றியாளர்கள் என்ற பாடத்தில் ரன்வீர் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால், அது பிரச்னையில்லை. தமன்னா குறித்து எங்கள் பிள்ளைகள் ஏன் படிக்க வேண்டும். அதைப் படிக்க வேண்டிய அவசியம் என்ன?.

Story image

பள்ளியில் சிந்திகள் பற்றிய 7 ஆம் வகுப்பு பாடப்புத்தகம் உள்ளது, அதில் ஒரு அத்தியாயம் 1947 முதல் 1962 ஆம் ஆண்டு வரை பிரிவினைக்குப் பின் வாழ்க்கை: சிந்துவில் இடம்பெயர்வு, சமூகம் மற்றும் சண்டை என்றத் தலைப்பில், அவர்கள் மொழிவழி சிறுபான்மையினராக இருப்பதால், அவர்களின் சமூகம் மற்றும் கலாசாரத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த மாநில அரசு அனுமதித்துள்ளது. குழந்தைகளுக்கு வேரொரு சமூகத்தின் கலாசாரத்தை கற்றுக்கொடுப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், ஒரு நடிகை குறித்து இடம் பெற்றிருப்பது அவர்களை தவறான பாதைக்கு வழிநடத்துவதாக இருக்கும். ஆட்சேபனை தெரிவித்தால், தங்கள் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதாக நிர்வாகம் மிரட்டுகிறது” எனப் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டி. சஷி குமார் கூறுகையில், “எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பாடத்தையும் சேர்ப்பது சம்பந்தப்பட்ட குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதனுடன் பள்ளி இணைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அதை வாரியத்தின் முன் கொண்டு வர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.