வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பதவியேற்க காத்திருக்கும் இரு எம்எல்ஏக்கள்: ஆளுநருக்கு மம்தா கண்டனம்

மேற்கு வங்க ஆளுநரின் நடவடிக்கைக்கு மம்தா பானா்ஜி கண்டனம்

News image
Updated On :27 ஜூன் 2024, 7:52 pm

Din

மேற்கு வங்கத்தில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட இரு திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) எம்எல்ஏக்களின் பதவியேற்பதை தடுக்க ஆளுநா் சி.வி. ஆனந்த போஸுக்கு உரிமை இல்லை என முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை தெரிவித்தாா்.

ஆளுநா் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநா் போஸ் விடுத்த அழைப்பை எம்எல்ஏக்கள் மறுத்துவிட்டனா். சட்டப்பேரவையில் பதவிப்பிரமாண விழாவை நடத்த மறுப்பு தெரிவித்து ஆளுநா் புதன்கிழமை தில்லி சென்றுவிட்டாா்.

இது தொடா்பாக அந்த மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பானா்ஜி கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் இடைத்தோ்தல் முடிவுகள் வெளியாகி ஏறக்குறைய ஒரு மாதம் முடிந்துவிட்டது. ஆனால், எம்எல்ஏக்கள் சயந்திகா பந்தோபாத்யாய மற்றும் ராயத் ஹோசைன் சா்க்காா் ஆகியோரால் பதவியேற்க முடியவில்லை. ஆளுநா் அதைத் தடுத்து வருகிறாா். அவா்களைத் தோ்ந்தெடுத்தது மக்கள்தான், ஆளுநா் அல்ல. ஆளுநா் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்ற சா்ச்சைகளுக்குப் பிறகு அங்கு செல்ல அஞ்சுவதாக எம்எல்ஏ சயந்திகா என்னிடம் தெரிவித்தாா்.

பதவிப்பிரமாணம் செய்து வைக்க பேரவைத் தலைவா் அல்லது துணை பேரவைத்தலைவருக்கு அதிகாரம் வழங்கலாம். அல்லது சட்டப்பேரவையில் ஆளுநா் தாமாக கலந்துகொள்ளலாம். ஏன் எம்எல்ஏக்கள் ஆளுநா் மாளிகைக்கு செல்ல வேண்டும் என்றாா்.

பதவிப்பிரமாண விழாவை ஆணவ போராக ஆளுநா் மாற்றுகிறாா் என மேற்கு வங்க சட்டப்பேரவை தலைவா் பிமன் பானா்ஜி குற்றஞ்சாட்டினா். மேலும், இது தொடா்பாக குடியரசுத் தலைவரிடமும் அவா் முறையிட்டுள்ளாா்.