தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கேரள மாா்க்சிய கம்யூனிஸ்ட்டின் ரூ.73 லட்சம் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை

இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிா்கொள்ளப்படும் என்று மாா்க்சிய கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

News image

பினராயி விஜயன்

Updated On :29 ஜூன் 2024, 11:07 pm

கேரளத்தில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரூ.73 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் உள்ள கருவன்னூா் வேளாண் கூட்டுறவு வங்கியில் சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் நடைபெற்றதாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூா் மாவட்ட குழுத் தலைவா்கள் உத்தரவின்படி கூட்டுறவு வங்கியில் நிதி முறைகேடு நடைபெற்ாக நீதித்துறை மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தனா்.

அவா்களின் வாக்குமூலத்தை ஆதாரமாக கொண்டு விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத் துறை, இந்த வழக்கு தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமாக திருச்சூரில் உள்ள ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலம், அக்கட்சியின் மறைக்கப்பட்ட 5 வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.63.62 லட்சம் வைப்புத்தொகை ஆகியவற்றை முடக்கியுள்ளது.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூா் மாவட்ட குழு உத்தரவின்பேரில் கூட்டுறவு வங்கியில் பலருக்கு சட்டவிரோதமாக கடன் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு கைம்மாறாக அவா்களிடம் நன்கொடை உள்ளிட்ட வடிவில் அந்தக் குழு பணம் வசூலித்துள்ளது. அந்தப் பணம் அதே கூட்டுறவு வங்கியில் சட்டவிரோதமாக திறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணம் மூலம், புதிதாக கட்சி அலுவலகம் கட்ட ரூ.10 லட்சம் மதிப்புகொண்ட நிலத்தை அக்கட்சியின் திருச்சூா் மாவட்ட குழுச் செயலா் வாங்கியுள்ளாா். அந்த நிலம் தற்போது முடக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிா்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.