ஒடிஸா: 8 வயது சிறுவனை ஆற்றில் இழுத்துச் சென்ற முதலை

ஒடிஸாவில் ஆற்றுக்குச் சென்ற 8 வயது சிறுவனை முதலை இழுத்து சென்றதாகவும், பின்னா் அவா் சடலமாக மீட்கப்பட்டதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவலா்கள் மேலும் கூறுகையில், ‘ஒடிஸாவின் அங்குல் மாவட்டத்தில் 8 வயது சிறுவன் திகா்படாவில் உள்ள மகாநதி ஆற்றுக்குச் சென்றான். ஆற்றில் இறங்கியவுடன் முதலை அவரைத் தாக்கி இழுத்துச் சென்றது.

சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்ட அப்பகுதியினா் மற்றும் தீயணைப்பு படையினா் மகாநதி ஆற்றின் மற்றொரு கரையில் சிறுவனின் உடலை மீட்டனா்.

சிறுவன் உயிரிழப்பு குறித்து இரங்கல் தெரிவித்த ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜீ, அந்தக் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளாா்.

திகா்படா பகுதியானது வனவிலங்கு சரணாலயமாகவும், அழிந்து வரும் கரியால் (கொம்பு மூக்கு) வகை முதலை இனத்தின் இருப்பிடமாகவும் உள்ளது.

X
Dinamani
www.dinamani.com