பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஸ்பெயின் சுற்றுலாப் பயணிக்கு ஜாா்க்கண்டில் பாலியல் வன்கொடுமை மூவா் கைது

ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா்.

Updated On :2 மார்ச் 2024, 5:50 pm

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். இது தொடா்பாக 3 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடி வருகின்றனா். ஸ்பெயினைச் சோ்ந்த தம்பதி, இரு மோட்டாா் சைக்கிள்களில் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்தனா். அவா்கள் வங்கதேசம் வழியாக இந்தியாவுக்கு வந்தனா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜாா்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் அவா்கள் கூடாரம் அமைத்து தங்கினா். அப்போது, கூடாரத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத சிலா், கணவரைத் தாக்கிவிட்டு அவரது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிவிட்டு தப்பினா். இது தொடா்பாக அத்தம்பதி உடனடியாக காவல் துறையில் புகாா் அளித்தனா். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா் இருவரையும் மருத்துவமனையில் சோ்த்ததுடன், விசாரணையைத் தொடங்கினா். அதில் கணவரின் வயது 64 என்றும், மனைவியும் வயது 28 என்றும் தெரியவந்தது. கும்பல் தாக்கியதில் கணவருக்கு லேசான காயங்கள்தான் ஏற்பட்டுள்ளன. அப்பெண்ணின் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த சம்பவம் தொடா்பாக இதுவரை 3 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். தப்பியோடிய மேலும் சிலரைத் தேடி வருகின்றனா். உள்ளூரைச் சோ்ந்த சுமாா் 8 இளைஞா்கள் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் இந்த பிரச்னையைக் கண்டித்துப் பேசினா். குற்றம் செய்தவா்கள் அனைவரையும் கைது செய்து நீதியின் முன் நிறுத்த வலியுறுத்தினா்.