ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தபால் ஓட்டுக்கான வயது வரம்பு உயர்வு

தபவால் ஓட்டுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

News image

அன்னதானப்பட்டி அம்பேத்கர் நகரில் நேரில் வீட்டிற்கு சென்று தபால் ஓட்டு மூலம் ஓட்டுகளை பெறும் தேர்தல் அலுவலர்கள்.

Updated On :2 மார்ச் 2024, 7:50 am

DIN

அஞ்சல் மூலம் வாக்களிக்கும் வசதிக்கான வயது வரம்பு 85 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அஞ்சல் ஓட்டு வசதியை பயன்படுத்தி வந்த நிலையில் மத்திய அரசு வயது வரம்பை உயர்த்தியிருக்கிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்தே வாக்களித்த நிலையில், இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசனை நடத்தியே இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதாவது, மக்களவை மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கும் நிலையில், இனி 85 மற்றும் அதற்கு மேல் வயதானவர்கள் மட்டுமே அஞ்சல் மூலம் வாக்களிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வயது வரம்பு 80 ஆக இருந்தது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அரசாணையில், தேர்தல் நடத்தை விதி 1961-ன்படி, அஞ்சல் ஓட்டு வசதியை பின்பற்றும் முதியவர்கள் என்று 80 வயதானவர்கள் என்பதை மாற்றி, தற்போது 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று திருத்தியமைத்துள்ளது. இந்த முடிவானது, தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசனை நடத்தியே அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வசதியைப் பின்பற்றி, அத்தியாவசிய சேவை ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், கரோனா பாதித்தவர்கள், மூத்த குடிமக்கள் வாக்களிக்கலாம்.

பிப்ரவரி வெளியான வாக்காளர் பட்டியல் விவகரத்தின் அடிப்படையில், மொத்தமுள்ள 96.88 கோடி வாக்காளர்களில் 1.85 கோடி வாக்காளர்கள் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.