தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர்

News image
Updated On :4 மார்ச் 2024, 9:10 am

DIN

கட்சியின் செயல்பாடு மீது அதிருப்தி தெரிவித்து, தனது எம்எல்ஏ பதவியை திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் தபாஸ் ராய் திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நான் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து பேரவைத் தலைவரிடம் அளித்துள்ளேன். நான் தற்போது சுதந்திரப் பறவையாகிவிட்டேன்.

ஜனவரி மாதம் தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது கட்சித் தலைமை தன்னுடன் நிற்கவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் பாஜகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, இது குறித்து நான் எதுவும் கூறப் போவதில்லை எனவும் அவர் பதிலளித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்திருப்பது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.