தெலங்கானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

தெலங்கானாடிவில் ரூ.56 ஆயிரம் கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தெலங்கானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

தெலங்கானாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார்.

பிரதரின் அதிகாரப்பூர்வ விழாவில் மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு தெலங்கானா முதல்வர் பிரதமர் மோயை வரவேற்று அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் அவருடன் மேடையைப் பகிர்ந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், 800 மெகாவாட் (பூனிட்-2)தெலங்கானா சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தை பெட்டபள்ளியில் பிரதமர் தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார்.

ஜார்கண்டின் சத்ராவில் வடக்கு கரன்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 660 மெகாவாட் (அலகு-2) திட்டத்தையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பிரதமர் என்பவர் ஒரு பெரிய சகோதரனைப் போன்றவர் என்றும், மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தைப் போல மற்ற மாநிலம் முன்னேறுவதற்கு அவரது ஆதரவு தேவை என்றும் ரேவந்த் ரெட்டி கூறினார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலங்கானா, மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை என்றும், நல்லுறவை விரும்புவதாகவும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும் கலந்து கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com