மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தினர், பிற பணியாளர்கள் வெளியேற உத்தரவு

மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தினர் மற்றும் பிற பணியாளர்களும் மே 10-க்குள் வெளியாற அந்நாட்டு அதிபர் உத்தரவு.
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்.
மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ்.

இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவுடன் இருந்த நல்லுறவின் அடிப்படையில், அந்நாட்டில் பல்வேறு முதலீடுகளை இந்தியா செய்திருந்தது.

மாலத்தீவுக்கு மருத்துவ உதவி மற்றும் கடல் கண்காணிப்புக்காக அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்கள், டாா்னியா் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்தியா வழங்கியுள்ளது. அவற்றை அந்நாட்டில் பராமரித்து, இயக்குவது உள்ளிட்ட பணிகளில் 88 இந்திய ராணுவ வீரா்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது மூயிஸ், கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று மாலத்தீவு அதிபராகப் பதவியேற்றாா்.

இவர் பிரசாரத்தின் போதே, அதிபராக பதவியேற்றால் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவத்தினரை வெளியேற்றுவோம் என்று தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசிடம் மாலத்தீவு கோரிக்கை வைத்திருந்தது.

ஆனால், மாலத்தீவு அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இந்திய ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை பராமரிக்க ராணுவத்தினருக்கு பதிலாக தொழில்நுட்பக் குழுவை அனுப்ப உடன்பாடு எட்டப்பட்டது.

மாலத்தீவில் இந்திய ஹெலிகாப்டருக்கு ராணுவம் அல்லாத குழு பொறுப்பேற்பு

அதன்படி, மாலத்தீவில் ஹெலிகாப்டர்களை பராமரித்த இந்திய ராணுவத்தினர் திரும்பப் பெற்றதுடன், செவ்வாய்க்கிழமை தொழில்நுட்பக் குழு அனுப்பப்பட்டது.

இதற்கிடையே, சீன நாட்டுடன் இலவச ராணுவ உபகரணங்களை பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மறுநாள், இந்திய ராணுவம் மட்டுமின்றி, தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட பிற பணியாளர்கள் அனைவரும் மே 10-க்குள் மாலத்தீவில் இருந்து வெளியேற்றுவோம் என்று மூயிஸ் தெரிவித்துள்ளார்.

மாலத்தீவு அதிபரின் பேச்சால், இரு நாட்டுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com