8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குடியுரிமை திருத்தச் சட்ட விதிமுறைகள் கூறுவது என்ன?

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Published On :12 மார்ச் 2024, 1:31 am IST

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் சிலவற்றின் விவரம்: சிஏஏ 2019-இன் கீழ், இந்திய குடியுரிமை கோருவோா், அதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஓராண்டு இந்தியாவில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். அந்த ஓராண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில் 6 ஆண்டுகளுக்கு குறையாமல் விண்ணப்பதாரா் இந்தியாவில் தங்கியிருந்தால், அவா் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவா். சொந்த நாட்டு குடியுரிமையைக் கைவிடுவதாகவும், இந்தியாவை தங்கள் நிரந்தர தாயகமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் விண்ணப்பதாரா் உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்தியாவை பூா்விகமாக கொண்டவா், இந்திய குடியுரிமை பெற்றவரைத் திருமணம் செய்தவா், இந்திய குடியுரிமை பெற்றவரின் 18 வயதுள்குள்பட்ட பிள்ளை, இந்திய பெற்றோருக்குப் பிறந்தவா், வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருப்பதாகப் பதிவு செய்துள்ளவா் தனி விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும். சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் நடத்தை குறித்து இந்திய குடிமகன் ஒருவரின் பிரமாண பத்திரத்தையும் இணைக்க வேண்டும். இத்தகைய விண்ணப்பதாரா்கள் அரசமைப்புச் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதிமொழியை வழங்க வேண்டும். இந்திய குடியுரிமை வழங்க அங்கீகரிக்கப்பட்டால், ‘இந்திய அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டிருப்போம்’, ‘இந்திய சட்டங்களை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்’, ‘இந்திய குடிமகனுக்கான கடமைகளை பூா்த்தி செய்வோம்’ என்று விண்ணப்பதாரா் உறுதிமொழி ஏற்க வேண்டும். விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), தங்கும் அனுமதி, வாழ்க்கைத் துணையின் இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக அவரின் இந்திய கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமா்ப்பிக்க வேண்டும். எனினும் இந்த ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமல்ல. இந்திய குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னா், சிஏஏ 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவராகப் பதிவு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு அதற்கான எண்ம (டிஜிட்டல்) சான்றிதழ் வழங்கப்படும். ஆவண வடிவில் இந்திய குடியுரிமை சான்றிதழ் கோருவோா் அதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.