நடுவழியில் நின்ற எஞ்ஜினை தள்ளிய ரயில்வே ஊழியர்கள்: விடியோ வைரல்

நடுவழியில் நின்ற எஞ்ஜினை தள்ளிய ரயில்வே ஊழியர்கள் தொடர்பான விடியோ வைரலாகியிருக்கிறது.
நடுவழியில் நின்ற எஞ்ஜினை தள்ளிய ரயில்வே ஊழியர்கள்: விடியோ வைரல்

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில், எஞ்ஜின் கோளாறு காரணமாக, நடுவழியில் நின்றுபோன எஞ்ஜின் பெட்டியை ரயில்வே ஊழியர்கள் தள்ளிச் சென்ற விடியோ வைரலாகியிருக்கிறது.

ஆங்காங்கே, கார், பேருந்து போன்ற நான்கு சக்கர வாகனங்கள் பழுதாகி நிற்பதையும் அதனை நால்வர் சேர்ந்து தள்ளுவதையும் பார்த்திருப்போம்.

ஆனால், சில நேரங்களில் ரயில் பெட்டிகளும் நடுவழியில் நின்று தள்ளினால்தான் நகர்வேன் என அடம்பிடிக்கும் வேளைகளில், பொதுமக்கள், ரயில்வே ஊழியர்கள் அல்லது ரயில் பயணிகளே கூட ரயிலை தள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை முந்தைய செய்திகள் மூலம் அறிந்திருக்கிறோம்தான்.

அந்த வகையில்தான், உத்தரப்பிரதேசத்திலும் ஒரு சம்பவ நடந்துள்ளது. பல லைக்குகளை அள்ளும் வகையில், நடுவழியில் தண்டவாளத்தில் நின்றுபோன ரயில் பெட்டியை, ரயில்வே ஊழியர்கள் தள்ளியபடி எடுத்துச் சென்ற விடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. இந்த விடியோவை பகிர்ந்திருக்கும் சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், உடனடியாக ரயில்வே அமைச்சரை அழையுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com