ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கேஜரிவால் கைதைக் கண்டித்து மார்ச் 31ல் இந்தியா கூட்டணி பேரணி

News image

கோப்புப் படம்.

Updated On :24 மார்ச் 2024, 8:25 am

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைதைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மார்ச் 31ஆம் தேதி தில்லியில் மாபெரும் பேரணி நடக்கவுள்ளது.

தில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் மார்ச் 21ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்ட அரவிந்த் கேஜரிவாலை, அமலாக்கத் துறை தலைமையகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ரௌஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி முன்பு அவரை ஆஜர்படுத்தினர்.

அப்போது அரவிந்த் கேஜரிவாலை 6 நாள்கள் விசாரணைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்பின்னா் அவருக்கு ஜாமீன் வழங்கவோ அல்லது நீதிமன்றக் காவலில் சிறையிலோ வைக்கப்படலாம். எனவே, அரவிந்த் கேஜரிவால் மனைவி சுனிதா கேஜரிவால் பொறுப்புகளை ஏற்கக் கூடிய சூழ்நிலை நிலவுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அமலாக்கத்துறை கைதை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாா்ச் 27 ஆம் தேதிக்கு முன் இந்த மனு விசாரணைக்கு வர வாய்ப்பில்லை என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கைதைக் கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மார்ச் 31ஆம் தேதி தில்லியில் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் இந்த பேரணியில் திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்தி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்வுள்ளன.

நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கருப்பொருளில் எதிர்க்கட்சிகளின் பேரணி நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.