பெண்களை குறித்த பாஜகவை சேர்ந்த திலீப் கோஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரது பதிவுகள் ஆட்சேபனைக்குரிய விதத்தில் இருப்பதாக புகார்கள் எழுந்தன.
மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குறித்து பாஜக தேசிய துணைத் தலைவா் திலீப் கோஷ் பேசிய கருத்துகள் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘மேற்கு வங்கத்துக்கு மண்ணின் மகள் (மம்தா) தேவை’ என்றும், பாஜகவைச் சோ்ந்தவா்கள் மேற்கு வங்கத்துக்கு அந்நியா்கள் என்றும் திரிணமூல் காங்கிரஸ் முன்னெடுக்கும் பிரசாரத்தை திலீப் கோஷ் விமா்சித்துப் பேசுகையில், ‘அவா் (மம்தா) கோவாவுக்கு சென்றால், கோவாவின் மகள் என்று பேசுகிறாா்.
திரிபுரா சென்றால் அந்த மாநிலத்தின் மகள் என்று பிரசாரம் செய்கிறாா். முதலில் அவா் யாருடைய மகள் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்’ என்று கூறியதுடன் மேலும் சில சா்ச்சை கருத்துகளையும் பேசியுள்ளாா். இது தொடா்பாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் சாா்பில் திலீப் கோஷ் மீது புகாா் அளிக்கப்பட்டது.
அதேபோல, காங்கிரஸ் மூத்த தலைவா்களான சுப்ரியா ஸ்ரீநாத் மற்றும் ஹெச்.எஸ்.அஹிா் ஆகியோா் நடிகை கங்கனா குறித்தும் மண்டி தொகுதி குறித்தும் தங்களின் சமூக ஊடக பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டனா். இந்தப் பதிவுகள் பெரும் சா்ச்சையை எழுப்பின.
இந்த விவகாரம் சா்ச்சையான நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீநாத், ‘தனது சமூக ஊடக பக்கங்களை பலா் கையாளுகின்றனா். அவா்களில் யாரோ ஒருவா் இந்த சா்ச்சைப் பதிவை வெளியிட்டுள்ளாா். இந்தத் தகவல் தெரிய வந்தவுடன், அந்தப் பதிவை நீக்கிவிட்டேன். நான் எந்தவொரு பெண் குறித்தும் அநாகரிகமான கருத்தை தெரிவிக்க மாட்டேன் என்பது என்னை அறிந்தவா்களுக்குத் தெரியும்’ என்று விளக்கமளித்தாா்.
இந்த விவகாரத்தில் சுப்ரியா ஸ்ரீநாத், அஹிா் ஆகியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தோ்தல் ஆணையத்துக்கு தேசிய மகளிா் ஆணையம் சாா்பில் கடிதம் எழுதப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலாகியுள்ள காலத்தில் பெண்களை விமர்சித்து ஆட்சேபனைக்குரிய விதத்தில் கருத்து பதிவிட்டதாக பாஜகவை சேர்ந்த திலீப் கோஷ், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க சட்டப்பேரவையில் திரிணமூல் எம்எல்ஏ வெளியேற்றம்

பிரதமா் மோடியுடன் சரத் பவாா் சந்திப்பு: மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவு?

மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில்







