பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

ராமேஷ்வரம் கபே குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!
குண்டுவெடிப்பு நிகழ்ந்த பெங்களூரு ’ராமேஸ்வரம் கஃபே’ உணவகம்
குண்டுவெடிப்பு நிகழ்ந்த பெங்களூரு ’ராமேஸ்வரம் கஃபே’ உணவகம்

பெங்களூரு ராமேஷ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை வியாழக்கிழமை கைது செய்ததாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.

முஸம்மில் ஷரீப் என்பவர் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மார்ச் 1-ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய மற்ற இரு குற்றவாளிகளுக்கு போக்குவரத்து ரீதியான உதவியை இவர் செய்து கொடுத்துள்ளார்.

மார்ச் 3-ம் தேதி இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய தேசிய புலனாய்வு முகமை, கர்நாடகம், தமிழகம் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் 18 இடங்களில் சோதனை மேற்கொண்டது.

பிரதான குற்றவாளிகளான முஸாவிா் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மாத்தேன் தாஹா  ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com